தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சொன்னதை செய்த முதலமைச்சர்' - தங்கச் சங்கிலி வழங்கிய பெண்ணிற்கு வேலை!

கரோனா நிவாரண நிதியாக தங்கச் சங்கிலியை வழங்கிய பெண்ணிற்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய வேலை வாய்ப்பு ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் வழங்கினார்.

தங்கச் சங்கிலி வழங்கிய பெண்ணிற்கு வேலை
தங்கச் சங்கிலி வழங்கிய பெண்ணிற்கு வேலை

By

Published : Jun 15, 2021, 7:52 PM IST

அண்மையில் மேட்டூர் அணை நீர் திறப்பு நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் சென்றிருந்தார். அப்போது செளமியா என்ற பொறியியல் மாணவி கரோனா நிவாரண நிதியாக தனது இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை முதலமைச்சரிடம் வழங்கினார். அதோடு தனக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி மனு கொடுத்திருந்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் சௌமியாவின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று சேலம் மாவட்டம் பொட்டனேரி பகுதியிலுள்ள அந்த மாணவியின் வீட்டிற்குச் நேரில் சென்ற மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையினை சௌமியாவிடம் வழங்கினார்.

தங்கச் சங்கிலி வழங்கிய பெண்ணிற்கு வேலை

அப்போது, முதலமைச்சர் தொலைபேசியில் தொடர் கொண்டு மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details