தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெரும்’ - கே.என்.நேரு - வளர்ச்சி திட்டப்பணிகள்

சேலத்தில் நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

minister Nehru in review meeting with district officials  minister Nehru  district officials  review  review meeting  salem news  salem latest news  சேலம் செய்திகள்  கே என் நேரு  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  வளர்ச்சி திட்டப்பணிகள்  வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கூட்டம்
கே என் நேரு

By

Published : Oct 31, 2021, 7:33 AM IST

சேலம்:மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டமானது, அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று (அக்.30) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் ஆர்.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் த.செ.கார்மேகம், மக்களவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), ஏ.கே.பி.சின்ராஜ் (நாமக்கல்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா.ராஜேந்திரன் (சேலம் வடக்கு), இரா.அருள் (சேலம் மேற்கு), எஸ்.சதாசிவம் (மேட்டூர்) உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கே என் நேரு

இக்கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு, “சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்தும், மென்மேலும் மக்கள் நலத்திட்டப்பணிகளை பொதுமக்களுக்கு விரைவாக சென்று சேர்க்கும் வகையிலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அரசு அலுவலர்களுடனான இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

அரசு அலுவலராகிய உங்களுடன் தூதுவராக நான் இணைந்து பணியாற்ற உள்ளேன். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 525 தேர்தல் வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முன்னதாக நடைபெற்று வருகின்ற வளர்ச்சி திட்டப்பணிகளில், குறிப்பாக நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நடைபெறுகின்ற பாதாளசாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் அனைத்தும் விரைவாக முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்கள் தொகுதியில் தேவைப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தெரிவித்துள்ளார்கள். அலுவலர்கள் அதனை விரைவாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகராட்சியில் நடைபெறுகின்ற பணிகள் சிறப்பாக நடைபெறகின்றதா என்பதை க்கண்டறிந்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று மென்மேலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று கூறினார்.

இதைனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நேரு, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.

இதையும் படிங்க: இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details