சேலம்,மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார் . தொடர்ந்து படகில் அமர்ந்து ஏரி முழுவதும் பயணித்த அவர் ஏரியில் மிதவை உணவகம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளதா என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அங்கு உள்ள ஓட்டல் தமிழ்நாடு உணவகத்திற்கு சென்று உணவு கூடங்களைப் பார்வையிட்டார்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு ஓட்டலில் மேலும் வசதிகளை மேம்படுத்தி தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் . பின்னர் அவர் ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.