சேலம்:நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் நாகியம்பட்டி உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 35 பேருக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (நவ.17) வழங்கினார். இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், சேலம் மக்களவை உறுப்பின பார்த்திபன், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் பொன்.கௌதம் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தநிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு பொருளாதார முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். மேலும், சேலம் மாவட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு 400 வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. இலங்கைத் தமிழர்களின் (Sri Lankan Tamils) முன்னேற்றத்தில் எப்போதும் திமுக துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.