சேலம்: மேட்டூர் அனல் மின் நிலையம் 1440 மெகாவாட் திறன் கொண்டது. இதில் 1,700 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று 500-கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அனல் மின் நிலையம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளப்படுத்த வேண்டும். கையுறை, காலணி, முக கவசம் உள்ளிட்ட பணி பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்குக் கூலியை அரசே நேரடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.