தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் பாமக எம்எல்ஏ மீது வரதட்சணை கொடுமை புகார் - எம்எல்ஏ விளக்கம் என்ன? - சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மீது புகார்

Mettur PMK MLA Sathasivam:சேலத்தில் மருமகள் அளித்த புகாரின் பேரில் மேட்டூர் பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.சதாசிவம், அவரது மகன் உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை உள்பட 6 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இது அனைத்தும் பொய்யாக போடப்பட்ட வழக்கு என சதாசிவம் விளக்கம் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 11:00 PM IST

Updated : Aug 23, 2023, 9:04 AM IST

சேலம்:மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருபவர் எஸ்.சதாசிவம். இவரது மகன் சங்கருக்கும், சேலம் சர்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மனோலியாக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததுள்ளது. இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மனோலியோ அளித்த புகாரின் பேரில் சூரமங்கலம் மகளிர் போலீஸார், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.சதாசிவம், மனைவி பேபி, அவரது மகன் சங்கர், மகள் கலைவாணி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி, பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எஸ்.சதாசிவம் செய்தியாளர்களிடம் கூறும் போது, "அனைத்து குடும்பங்களில் பிரச்சினை உள்ளதாகவும், குடும்ப பிரச்சினையில் பக்குவம் இல்லாமல் தனது மருமகள் போலீஸை நாடி உள்ளதாகவும், வழக்குரைஞரின் பேச்சைக் கேட்டு பொய்யாகப் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சட்டமன்ற உறுப்பினர் மீது அவ்வளவு சீக்கிரமாகப் புகார் தர முடியாது. நான் நேர்மையாக நடந்து கொள்பவன். என் மீது பொய் புகார் கூறப் பட்டு உள்ளது. போலீஸார் சரியாக விசாரிக்காமல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான் தொகுதி பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குடும்பத்தைப் பார்க்க முடியவில்லை. எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என கூறினார்.

மேலும், "இதனால் சூரமங்கலம் அனைத்தும் உள்ள காவல் நிலையம் சென்றேன். இந்த வழக்கு குறித்துத் தெரிவித்து சம்மன் வழங்கியுள்ளனர். விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் வருகிறேன் எனத் தெரிவித்துள்ளேன். என் தொகுதி மக்களுக்கு நிறையச் செய்ய வேண்டியுள்ளது. இந்த பிரச்சினைக்கு வருத்தப்படுகிறேன். எனக்கும் என் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்து இருக்கலாம்" என்று மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் கூறினார்.

இதையும் படிங்க:B.E., B.Tech 2ம் சுற்று கலந்தாய்வு நிறைவு; 208 கல்லூரிகளில் 10% மாணவர்கள் சேரவில்லை.. வேகமாக நிரம்பும் துறைகள் எவை?

Last Updated : Aug 23, 2023, 9:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details