தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணமான 7 மாதங்களில் பெண் தற்கொலை! - Woman commits suicide in Salem

சேலம்: மேட்டூர் அருகே திருமணமான 7 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தற்கொலை
பெண் தற்கொலை

By

Published : May 4, 2021, 9:34 PM IST

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தண்ணீர் குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (30). இவருக்கும் கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த குமுதா (27), என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு மாத முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (மே.04) மர்மமான முறையில் குமுதா தூக்கில் சடலமாக தொங்கியதை அக்கம்பக்கத்தினர் கண்டு, குமுதாவின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குமுதாவின் தந்தை லட்சுமி நரசிம்மன், நங்கவள்ளி காவல் நிலையத்தில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அப்புகாரை வழக்குப்பதிவு செய்த நங்கவள்ளி காவல் ஆய்வாளர் பவுலோஸ் குமார், அருண்குமாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் தூக்கில் பிணமாக தொங்கிய குமுதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நகைக்காக மூதாட்டி கொலை: இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details