தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சட்டுனு வாங்க மரத்தை நடுவோம்' - ஏரிக்கரையில் மரம் நட ஆர்வம் காட்டிய செம்மலை! - குடிமராமத்துப் பணி

சேலம்: தைலாக்கவுண்டனூர் ஏரியில் குடிமராமத்துப் பணி நிறைவடைந்ததையடுத்து, ஏரியைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் பணியை மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை தொடங்கி வைத்தார்.

mettur MLA tree planting under kudimaramathu scheme

By

Published : Nov 19, 2019, 11:10 AM IST

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் மழைநீரைச் சேமிப்பதற்காக ஏரிகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றை தூர்வாரும் குடிமராமத்துத் திட்டத்தை கொண்டு வந்தது. குடிமராமத்துப் பணி செய்து நீர் நிரம்பிய மற்றும் நிரம்பாமல் உள்ள ஏரிகளைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு மீண்டும் பெருமளவு மழை பொழிய வகை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏரிகளில் தூர்வாரும் பணிகள் முடிவடைந்து, பருவ மழையால் நீர்நிலைகளில் நீர் நிரம்பி வருகிறது.

இதில், மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட தைலாக்கவுண்டனூர் ஏரியும் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டது. இந்நிலையில், தைலாக்கவுண்டனூர் ஏரியைச் சுற்றிலும் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை இன்று தொடங்கி வைத்தார். அப்போது அருகிலிருந்த கட்சித்தொண்டர்கள் அனைவரையும் அழைத்து, 'சட்டுனு வாங்க மரத்தை நடுவோம்' என ஆர்வமாக களத்தில் இறங்கினார், செம்மலை.

மரக்கன்று நடும் விழாவைத் தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலினி, உதவி பொறியாளர் சங்கர் கணேஷ், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குடிமராமத்துப் பணிகளுக்காக மாநில அரசு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details