தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் அணை மதகுகளில் உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தம்!

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதையடுத்து , அணையின் மதகுகளின் வழியாக திறக்கப்பட்ட உபரிநீர் இன்று நிறுத்தப்பட்டது.

mettur dam water level

By

Published : Oct 27, 2019, 11:08 PM IST

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பருவமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் கடந்த 23ஆம் தேதி மூன்றாவது முறையாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

இதனால் 16 கண் மதகுகள் வழியாக காவிரியாற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 27,500 கனஅடியாக இருந்தது. பின்னர் ,நேற்று காலையில் 22,500 கனஅடியாகவும், மாலையில் 16,000 கனஅடியாகவும் குறைந்தது.

மூன்று நாட்களுக்குப் பின், 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்ட உபரிநீர் முழுமையாக நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணை மின் நிலையங்கள் வழியாக மட்டும் 16,000 கனஅடி உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக பாசனத்திற்கு, வினாடிக்கு 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 120.20 அடியாகவும் , நீர்இருப்பு 93.79 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

இதையும் படிங்க: காவிரிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details