தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 அடியை எட்டியது மேட்டூர் அணை - நீர்மட்டம்

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டு 4ஆவது முறையாக 100 அடியை எட்டியிருப்பதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Mettur dam water level updates
Mettur

By

Published : Nov 27, 2020, 5:46 PM IST

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக வறட்சி நிலவுவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்தது. இதனையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. இன்று (நவ 27) காலை 8 மணி நிலவரப்படி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக 500 கன அடி நீரும் மேற்கு, கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக 250 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடியாகும். நேற்று முன்தினம் (நவம்பர் 25) வினாடிக்கு 7 ஆயிரத்து 89 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (நவம்பர் 26) 6 ஆயிரத்து 361 கனஅடியாக குறைந்தது. நீர்திறப்பு குறைவால், நேற்று முன்தினம் 98.58 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 98.95 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 27) காலை 99.8 அடியை எட்டிய நீர்மட்டம் 12:00 மணியளவில் 100 அடியை எட்டியது.

நடப்பாண்டில் நான்காவது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீர்வரத்து 8,111 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 64 டிஎம்சி ஆகவும் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details