சேலம்:கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
இதனையடுத்து மேட்டூர் அணைக்கு பிலிகுண்டுலுவிலிருந்து வரும் நீரின் வரத்து சில நாள்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது .
இன்று காலை நிலவரப்படி, நீர்வரத்து 16 ஆயிரத்து 676 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.420 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 62.813 டிஎம்சி ஆகவும் உள்ளது.
அதே நேரத்தில் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக 12 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக 800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு எதுவும் பதிவாகவில்லை என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.