தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு - மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியிலிருந்து ஆயிரம் கன அடியாக குறைத்து வெளியேற்றப்படுகிறது.

1000 கன அடியாக குறைப்பு
1000 கன அடியாக குறைப்பு

By

Published : Oct 7, 2021, 6:29 PM IST

சேலம்: அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகவும், இன்றைய காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.48 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 38.53 டிஎம்சி ஆகவும் உள்ளது.

பிலிகுண்டுலுவிலிருந்து அணைக்கு வரும் நீரின்வரத்து, வினாடிக்கு 12 ஆயிரத்து 168 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

டெல்டா பாசன தேவைக்கு நீர் திறப்பு

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்று(அக்.06) மாலை வரை 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு டெல்டா பாசன தேவைக்கு நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுக’ - இபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details