கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் கர்நாடக அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேலும், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தொடர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று (ஆக.31) மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, நான்காயிரத்து 144 கன அடியாக இருந்தது. இன்று (செப்.1) நீர்வரத்து சிறிது அதிகரித்து ஐந்தாயிரத்து 75 கன அடியாக வந்து கொண்டிருந்தாலும், அணையிலிருந்து 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயிலிருந்து 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரைக்காட்டிலும், அங்கிருந்து பல மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 90.71 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று ஒரு அடிக்கு மேல் சரிந்து 89.81 கன அடியாக உள்ளது.
இதையும் படிங்க: பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!