தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர்ந்து உயர்ந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம் - மேட்டூர் அணை

சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் 98.51அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர் உயர்வு
Mettur dam water level continuous increase

By

Published : Oct 6, 2020, 1:16 PM IST

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.22 அடியாக இருந்தது.

நீர்வரத்து தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருவதால் இன்று (அக்.06) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.51 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 62.927 டி.எம்.சியாக உள்ளது.

பிலிகுண்டுவிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,903 கன அடியிலிருந்து 11,318 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக மேட்டூர் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details