தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்றாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி - மேட்டூர் அணை

நடப்பு நீர் பாசன ஆண்டில் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி மூன்றாவது முறையாக நிரம்பியது.

Etv Bharatமூன்றாவது முறையாக நிரம்பிய  மேட்டூர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி
Etv Bharatமூன்றாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி

By

Published : Dec 8, 2022, 11:31 AM IST

சேலம்:காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கன அடியாக உள்ளது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று (டிச.7) மாலை 4 மணி நிலவரப்படி 119.88 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு 10,662 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து இரவு 7.05 மணிக்கு முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. நடப்பு நீர் பாசன ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை 3 ஆவது முறையாக எட்டியிருப்பது காவிரி டெல்டா பாசன விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Cyclone Mandous: கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

ABOUT THE AUTHOR

...view details