சேலத்தில் நடைப்பெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். அப்போது அதில், 17 உயிர்களுக்காக நீதி கேட்டு போராடியவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'மேட்டுப்பாளையம் உயிரிழப்பு: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய கோரிக்கை' - மேட்டுபாளையம் பலி
சேலம்: மேட்டுப்பாளையத்தில் 17 உயிர்கள் பலியான விவகாரம், வீட்டின் உரிமையாளர் சிவ சுப்பிரமணியத்தை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

protest
உயிராபத்தை விளைவிக்கும் வகையிலிருந்த சுற்றுச் சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இதில் வலியுறுத்தினர்.
பின்பு கொளத்தூர் மணி உள்ளிட்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.