தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் பணிகளுக்காக இலவசமாக வழங்கப்பட்ட 22 மெட்ரிக் டன் இயற்கை உரம் - சேலத்தில் விவசாயிகளுக்கு இலவச இயற்கை உரம்

சேலம்: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஒன்பது நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட 22 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் ஆத்தூர் தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

வேளாண் பணிகளுக்காக 22 மெட்ரிக்டன் அளவிலான இலவச இயற்கை உரம்
வேளாண் பணிகளுக்காக 22 மெட்ரிக்டன் அளவிலான இலவச இயற்கை உரம்

By

Published : Dec 15, 2019, 9:42 AM IST


சேலம் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டங்களிலுள்ள 60 கோட்டப் பகுதிகளில், தினசரி 400 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் சேகரமாகிறது. அவற்றில் தினசரி வீடுகள், வணிக நிறுவனங்களில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளைச் சேகரித்து அதனை மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் எனத் தரம் பிரித்து மக்கும் கழிவுகளிலிருந்து உரம் தயார் செய்ய பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தூய்மை இந்தியா திட்டம், சீர்மிகு நகரத் திட்டங்களின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள, மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 50 இலட்சம் மதிப்பில் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.18-ல் மெய்யனூர் பகுதியில் 2 மையங்கள், அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.12ல் காக்காயன்காடு பகுதியில் 3 மையங்கள், கோட்டம் எண்.17ல் டி.வி.எஸ் பகுதியில் 1 மையம், அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண்.9ல் வாய்கால் பட்டறை பகுதியில் 2 மையங்கள் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.60ல் சீலநாயக்கன்பட்டி பகுதியில் 2 மையங்கள், கோட்டம் எண்.52-ல் சீரங்கன் தெரு பகுதியில் 1 மையமும் என மொத்தம் 11 மையங்களும் மற்றும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் கோட்டம் எண். 28-ல் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் 2 மையங்கள் என மொத்தம் ரூ.10 கோடியே 10 இலட்சம் மதிப்பீட்டில் 13 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வேளாண் பணிகளுக்காக 22 மெட்ரிக் டன் அளவிலான இலவச இயற்கை உரம்
இம்மையங்களில் விஞ்ஞான முறையில் உரம் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், நாள் ஒன்றிற்கு 60 மெட்ரிக் டன் அளவிலான மக்கும் கழிவுகள் உரமாக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு, உரமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஒன்பது நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட 22 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம், ஆத்தூர் தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், சுகாதார ஆய்வாளர்கள் சித்தேஸ்வரன், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் திறப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details