தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நாட்டின் ஒவ்வொரு பெண்ணிற்கும் தேவை" - நடிகை நயன்தாரா!

ஃபெமி 9 நிறுவனத்தின் நோக்கமே மாதவிடாய் பற்றி நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என அந்நிறுவனத்தின் வெற்றி விழாவில் நடிகை நயன்தாரா தெரிவித்தார்.

சேலம்
சேலம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 10:04 PM IST

Updated : Jan 10, 2024, 10:28 PM IST

"மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நாட்டின் ஒவ்வொரு பெண்ணிற்கும் தேவை" - நடிகை நயன்தாரா!

சேலம்: விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் அழகு சாதன பொருட்களை விற்கும் ஃபெமி 9 என்ற நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கினர். திரைத் துறையில் அசத்தி வரும் இருவரும் இந்த நிறுவனத்தின் மூலம் தொழில் முனைவராக களம் கண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களது நிறுவனம் சானிட்டரி நாப்கினை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

ஃபெமி 9 நிறுவனத்தின் சானிட்டரி நப்கின் நன்கு விற்பனையானது என கூறப்பட்ட நிலையில், இன்று அதன் வெற்றி விழா நடைபெற்றது. சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெற்றி விழா நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன், கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, "மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு இன்னும் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் சேரவில்லை என நினைகிறேன். பலர் விழிப்புணர்வுடன் இல்லை. இதுவரை சானிட்டரி நாப்கின் என்று சொன்னது கிடையாது. ஆனால் இன்று இந்த மேடையில் இத்தனை ஆண்கள், பெண்கள் என அனைவரின் மத்தியில் சானிட்டரி நாப்கின் என்று சொல்வதே ஒரு பெரிய மாற்றம் என நினைக்கிறேன்.

ஃபெமி 9 நிறுவனத்தின் நோக்கமே மாதவிடாய் பற்றி விழிப்புணர்வு நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் போய் சேர வேண்டும் என்பது தான். ஃபெமி 9 சானிட்டரி நாப்கின் பெண்களின் ஆரோக்கியத்தை முதன்மைபடுத்தி உருவாக்கப்பட்ட பொருள். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண் இருப்பார்கள் என சொல்வது போல், சாதித்த பெண்களுக்கும், மிக மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார்கள்" என்று நயன்தாரா கூறினார்.

இதையும் படிங்க:ஏக்நாத் ஷிண்டே அணிக்கு அதிகாரம்! உத்தவ் தாக்ரேவுக்கு பின்னடைவு! மகாரஷ்டிராவில் என்ன நிலவரம்?

Last Updated : Jan 10, 2024, 10:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details