தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் கள்ளநோட்டு அச்சடித்த நபர்கள் கைது

By

Published : Oct 25, 2021, 5:39 PM IST

சேலத்தில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்தி குறித்து ஆடிட்டர் சங்கத் தலைவர் ஜம்புசாரியா
இந்தி குறித்து ஆடிட்டர் சங்கத் தலைவர் ஜம்புசாரியா

சேலம்:சங்ககிரி பகுதியில் கள்ளநோட்டு அச்சடிக்கப்படுவதாக காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தனிப்படை காவலர்கள் சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் பொன்னுசாமி என்பவர் வீட்டில் நவீன பிரிண்ட்டர் இயந்திரத்தைப் பயன்படுத்தி 500, 200 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, பொன்னுசாமி, அவரது கூட்டாளிகள் சதீஷ், சின்னத்தம்பி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அளவிலான கள்ளநோட்டுகள், பிரிண்ட்டர், மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தி குறித்து ஆடிட்டர் சங்கத் தலைவர் ஜம்புசாரியா

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தீபாவளி சீசன் என்பதால், ஜவுளிக் கடைகள், பட்டாசுக் கடைகளில் நடைபெறும் விற்பனையின்போது புழக்கத்தில் விட ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது தெரியவந்தது.

அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள்

கள்ள நோட்டு கும்பல் சிக்கியுள்ளதையடுத்து மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:தேர்தல் அலுவலரை மிரட்டிய விவகாரம்: அதிமுகவை சேர்ந்த 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details