சேலம்: ஆடிட்டர் ரமேஷின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஜூலை19) சேலத்தில் கடைபிடிக்கப்பட்டது.
அதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆடிட்டர் ரமேஷின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பேசியதாவது, "மேகதாதுவில் அணை கட்டப்பட்டக் கூடாது என்பது தான் தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாடாகும். அங்கு அணைகட்டப்பட்டால், மழை இல்லாத காலங்களில் தமிழ்நாட்டிற்கு நீர் கிடைக்காத நிலை ஏற்படும்.
இந்த முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தக்கோரி டெல்லி சென்ற அனைத்து கட்சிக்குழுவில் பாரதிய ஜனதா கட்சியும் இடம் பெற்றிருந்தது. தமிழ்நாட்டின் நலனில், பாஜக முழு அக்கறையுடன் இருக்கும்.
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது திமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை கட்டாயம் ரத்து செய்து விடுவோம் எனக் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் மாறி மாறி கருத்து கூறி வருகிறது. நீட் தேர்வு நடைபெறாது என உறுதி கூறிய திமுக, தற்போது மாறி மாறி பேசுவது சரியல்ல . எங்களைப் பொருத்தவரை நீட் தேர்வு யாருக்கும் எதிரானது இல்லை. நீட் தேர்வு காரணமாக, 2020ஆம் ஆண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் பயிலும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார்.
தொடர்ந்து, அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கட்சியினரிடையே உறவு சுமூகமாக இருக்கிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க:மருத்துவப் படிப்பில் 69% இட ஒதுக்கீடு நடைமுறை: அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவு