சென்னை:கரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பல்வேறு வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று(செப். 12) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்திலுள்ள 1,235 வாக்குச்சாவடி மையங்கள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 அரசு மருத்துவமனைகள், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை என 1,356 இடங்களில் தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியது.