நிவர் புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகளில் மருத்துவ உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக மருத்துவ சேவை வழங்கிட சேலம் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் 20 மருத்துவக் குழுவினர் வாகனங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவசர கால மருத்துவ சேவைக்குத் தேவைப்படும் மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள், கிருமி நாசினிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை போதுமான அளவிற்கு மருத்துவக் குழுவினருடன் அனுப்பிவைக்கப்பட்டதாக சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.