நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்களிடையே கரோனா தொற்றானது சமூகப் பரவலாக மாறக் கூடாது என்பதற்காக சேலம் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதன்படி சேலம் மாநகரப் பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் இயங்கக் கூடாது என்று மாநகராட்சி ஆணையர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
தடை உத்தரவினை மீறி இறைச்சிக் கடைகள் இயங்கினால் கடைக்குச் சீல்வைத்து அபராதம் விதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உரிமம் ரத்துசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தடையை மீறி விற்பனைசெய்த இறைச்சிக் கடை இந்நிலையில், சேலம் மாநகரப் பகுதியில் தடை உத்தரவினை மீறி கடையின் ஷெட்டரை மூடி உள்ளே வைத்து ஆட்டு இறைச்சி விற்பனை நடைபெற்றது. அதேபோல் அம்மாபேட்டை பகுதியில் கோழி இறைச்சி விற்பனையும் செய்யப்பட்டது.
தடையை மீறி விற்பனை செய்த இறைச்சி கடைக்கு சீல்! தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலர்கள் அந்த இரண்டு கடைகளுக்கும் சீல்வைத்ததோடு, தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, விற்பனைக்காக வைத்திருந்த இறைச்சியைப் பறிமுதல்செய்தனர்.
பறிமுதல்செய்யப்பட்ட இறைச்சி இதையும் பார்க்க: விழுப்புரத்தில் ஒரேநாளில் 20 பேருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமங்கள்!