தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏற்காடு ஏரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை! - மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

ஏற்காட்டில் உள்ள ஏரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துணை ஆட்சியர் சேக் அப்துல் ரகுமான் ஆய்வுசெய்தார்.

ஏற்காடு ஏரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை!
ஏற்காடு ஏரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை!

By

Published : Jun 19, 2021, 7:38 AM IST

Updated : Jun 19, 2021, 7:52 AM IST

சேலம்: மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் ஆய்வுமேற்கொண்டார்.

அப்போது ஏற்காடு பொதுமக்கள், குடிநீர், விளைநிலங்களின் ஆதாரமாக விளங்கும் ஏரி தூர்வாரப்படாமல் உள்ளது என்றும், அதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் ஆட்சியரிடம் புகார் தெரிவித்து, ஏரியைத் தூர்வார மனு வழங்கினர்.

இதனையடுத்து ஆட்சியர் அளித்த உத்தரவையடுத்து, நேற்று (ஜூன் 18) துணை ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் ஏரி வளாகத்தில் ஆய்வுநடத்தி பணிகளை விரைவில் தொடங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் பழுதடைந்த கால்வாய் ஆகியவற்றை ஒழுங்காகச் சீரமைத்து ஏரிகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வில், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Last Updated : Jun 19, 2021, 7:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details