மத்திய பாஜக அரசின், புதிய மின்சார சட்டத் திருத்த மசோதா பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள், நெசவாளர்கள், குடிசை பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த இலவச மின்சார சேவை நிறுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது - விவசாய தொழிலாளர் சங்கம் - விவசாய தொழிலாளர் சங்கம்
சேலம்: மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
எனவே, “இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, கரோனா நிவாரண நிதியாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.7,500 வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் வழங்கிய சுய உதவிக்குழு கடன்களை ரத்து செய்ய வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாக உயர்த்தி ரூ.600 கூலி வழங்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் பொருள்கள் வாங்க 40 விழுக்காடு தொகை செலவிடப்பட்டது. தற்போது 90 விழுக்காடாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தொழிலாளர்களுக்கு வேலை குறைவாக கிடைக்கும் அபாயம் உள்ளது. எனவே 90 விழுக்காடு பொருட்கள் வாங்க தற்போது மாற்றப்பட்ட உத்திரவை ரத்து செய்து பழைய படி 40 விழுக்காடு பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சேலத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டாட்சியர் மற்றும் ஊராக வளர்ச்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.