தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு! - சேலம் மாவட்ட செய்திகள்

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு இந்திய அஞ்சல் துறை சார்பில் மை ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.

மாரியப்பனுக்கு ' மை ஸ்டாம்ப்' வெளியீடு
மாரியப்பனுக்கு ' மை ஸ்டாம்ப்' வெளியீடு

By

Published : Sep 15, 2021, 8:33 PM IST

சேலம்: இந்தியா சார்பில் டோக்கியோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் ஐந்து தங்கம், வெள்ளி உள்ளிட்ட 19 பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் சாதனை படைத்தனர்.

இந்நிலையில் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இடம்பிடித்துள்ளார் தமிழ்நாடு வீரர் மாரியப்பன். இவர் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளி வென்று பெருமை சேர்த்துள்ளார்.

மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு

கடந்த 2014ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்ற மாரியப்பன் தற்போது நடைபெற்ற பாரா ஒலிம்பிக் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார். இதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாரியப்பனுக்கு ' மை ஸ்டாம்ப்' வெளியீடு

இந்நிலையில், இன்று (செப்.15) ஓமலூர் அடுத்து உள்ள பெரியவடகம்பட்டி மாரியப்பன் இல்லத்தில் மாரியப்பனுக்கு மை ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது. இதனை சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அஞ்சல் துறையினர் நேரில் வழங்கினர்.

மேலும் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு நாடு முழுவதும் இருந்து வந்த 510 வாழ்த்து இ-போஸ்ட்களை வழங்கினார். இதனை மகிழ்ச்சியுடன் மாரியப்பன் பெற்றுக்கொண்டார்.

மை ஸ்டாம்ப் வெளியீடு

பிரதமர் மோடியிடம் பேசிய பின்பு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மை ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும், அளவிடமுடியாத சந்தோஷமாகவும் உள்ளது. இந்தமுறை மழையின் காரணமாக தங்கபதக்கம் பெற முடியவில்லை. அடுத்த முறை கட்டாயம் தங்கப் பதக்கம் வெல்வேன். பாரத பிரதமர் மோடி அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் பேசிய பின்பு மிகப்பெரிய புத்துணர்ச்சி கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : இளைஞர் படுகொலை: பழி தீர்க்க நடந்த கொலையா என போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details