ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி காப்புக்காட்டில் வனத் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்மரக்கட்டை என்ற இடத்தில் வனக்குட்டையில் ஏதோ ஒரு பொருளை கலப்பது தெரியவந்தது.
காவல் துறையினர் அந்தக் கும்பலைச் சுற்றிவளைக்க முயன்றபோது ஒருவர் மட்டுமே பிடிபட்டார் மற்றொருவர் தப்பியோடிவிட்டார். பின்பு விசாரணையில் சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த வெள்ளையன், தண்ணீர் குடிக்கவரும் யானையை சகாடிக்கவே யூரியா உரத்தை வனக்குட்டையில் கலந்ததாகத் தெரியவந்துள்ளது.