தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு! - salem court man tried suicide news

சேலம்: நீதிமன்ற வளாகத்தில் சுமை தூக்கும் தொழிலாளி திடீரென்று தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

suicide
சேலம்

By

Published : Jan 26, 2020, 1:42 PM IST

சேலம் கொழிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாசலம், மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கொழிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சினி என்ற விதவை பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக மண உறவைத் தாண்டிய காதல் இருந்துள்ளது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு ரஞ்சினி, வெங்கடாசலத்துடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால், மன வேதனையிலிருந்த வெங்கடாசலம் இன்று காலை சேலம் நீதிமன்ற வளாகம் முன்பு தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். அப்போது, குடியரசு தின விழாவிற்காக வந்த வழக்கறிஞர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர், வெங்கடாசலத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்.பி.யை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details