சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்துக்கு உட்பட்ட செம்மாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி - விஜயலட்சுமி தம்பதியரின் இளைய மகன் ஜெகநாதன், உடல்நலக்குறைவால் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளார். இவர் கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை சேலம் - பெங்களூரு ரயில்வே பாதையில் உள்ள தண்டவாளத்தில் ஜெகநாதன் இறந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல் துறை, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர்.