தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த உறவினர்மீது பாய்ந்த போக்சோ - Man arrested under Pocso near Mallur Salem

சேலம்: 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அவரது நெருங்கிய உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போக்சோ
கைது செய்யப்பட்ட நபர்

By

Published : May 12, 2020, 8:34 AM IST

சேலம் மாவட்டம், மல்லூர் அடுத்த ஏர்வாடி கருவேலங்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, தன்னுடைய அத்தை மகன் திருமலை என்பவரது வீட்டில் தங்கியபபடி, அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருமலை, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக, சேலம் மல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், திருமலை சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதியானதை அடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் மல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

14 வயது சிறுமியை, நெருங்கிய உறவினர் ஒருவரே பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :'சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம்'- இயக்குநர் பா. ரஞ்சித்!

ABOUT THE AUTHOR

...view details