தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 15, 2019, 8:04 PM IST

ETV Bharat / state

துப்புரவுத் தொழிலாளர்களின் ஊதியத்தில் கையாடல் செய்தவர் கைது!

சேலம்: மாநகராட்சிக்கு உட்பட்ட கொண்டாலம்பட்டி மண்டலத்தில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் பண பலன்களில் ரூ. 88 லட்சம் வரை கையாடல் செய்த துப்புரவுத் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

துப்புரவு தொழிலாளி

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி , கொண்டலாம்பட்டி , சூரமங்கலம் ஆகிய பகுதிகளை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அங்கு பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அந்தந்த மண்டலங்களிலேயே அனைத்து வித பண பலன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கொண்டாலம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 100க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பண பலன்கள் காசோலைகள் மூலமாக வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சதீசுக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் மோசடி குறித்து விசாரணை நடத்த கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் ரமேஷ்பாபுவுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.

மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் நடத்திய விசாரணையில் துப்புரவுத் தொழிலாளி வெங்கடேசன் என்பவர் ரூ.88 லட்சம் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டது. அவர் கடந்த எட்டு மாத காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details