ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காவலரிடமே கைவரிசையா'... காவல் துறை வாகனத்தை திருடியவர் கைது! - திருட்டு செய்தி

சேலத்தில் காவல் துறை வாகனத்தை காவலர் குடியிருப்பில் நுழைந்து திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார். காவல்துறை வாகனம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை வாகனத்தை திருடியவர் கைது!
காவல்துறை வாகனத்தை திருடியவர் கைது!
author img

By

Published : Feb 10, 2023, 3:00 PM IST

சேலத்தில் காவல் துறை வாகனத்தை காவலர் குடியிருப்பில் நுழைந்து திருடி சென்ற நபர் கைது

சேலம்:குமாரசாமிபட்டி பகுதியில் மாநகர காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இங்கு சேலம் மாநகர காவல் துறையினரின் ரோந்து வாகனங்கள், காவல் துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் கனரக வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் துறை வாகனம் நேற்று இரவு காணாமல் போனதாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கேமராவினை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அரசு சின்னம் வைத்த வாகனம் ஒன்று 2 நாட்களாக குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து சென்றது பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் அரசு வாகனத்தின் எண்ணை வைத்து ஆய்வு செய்த போது, அந்த எண்ணில் எந்த வித வாகனமும் பதிவாகவில்லை என தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வாகனத்தை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் பகுதியில் அரசு சின்னம் பதித்த வாகனம் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து சென்று போலி அரசு வாகனத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற மதன் குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். குடிபோதையில் இருந்த மதன் குமார் காவல் துறையினரிடம் விதண்டாவாதமாக பதில் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் காவல் துறை வாகனத்தைத் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில் சேலம் சூரமங்கலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை அஸ்தம்பட்டி காவல் துறையினர் மீட்டனர். இதனையடுத்து மதன்குமார் வேறு ஏதாவது வாகனத்தை திருடி உள்ளாரா? என்பது குறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கீரனூர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இன்ஸ்பெக்டர் வீரகாந்தி பணிநீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details