சேலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா தொற்று சமூக பரவலாக மாறுவதைத் தடுக்கும் விதமாக மாநகரம் முழுவதும் நேற்றிலிருந்து வரும் 28ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும், இந்த முழு ஊரடங்கின் போது மருந்தகங்கள் தவிர, அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட எந்தக் கடைகளும் திறக்கக் கூடாது என்றும், வீடுகளிலிருந்து மக்கள் வெளியேவந்தால் வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.