தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சோசலிசத்துடன் இணைந்தார் மம்தா பானர்ஜி' - viral Wedding Invitation

பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்போருக்கு பெயரில் சித்தாந்தங்கள், உலக நாடுகள், அரசியல் விழிப்புணர்வு என அனைத்தும் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் சேலத்தில் மணமகள் மம்தா பானர்ஜி, மணமகன் சோசலிசம் ஆகியோர் தங்களின் இனிய திருமண வாழ்க்கையை இனிதே தொடங்கினர்.

'சோசலிசத்துடன் இணைந்தார் மம்தா பானர்ஜி'
'சோசலிசத்துடன் இணைந்தார் மம்தா பானர்ஜி'

By

Published : Jun 13, 2021, 2:10 PM IST

மணமகன் சோசலிசம் - மணமகள் மம்தா பானர்ஜி. தங்கள் நல்வரவை எதிர்பார்க்கும் கம்யூனிசம், லெனினிசம், மார்க்சிசம்.... இது இவர்களின் திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்கள். இந்த திருமண அழைப்பிதழ் கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

'சோசலிசத்துடன் இணைந்தார் மம்தா பானர்ஜி' - செங்கொடி பறக்க கெட்டிமேளம்

இந்நிலையில் கரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, சேலம் மாவட்டம் அம்மானி கொண்டலாம்பட்டி அருகில் உள்ள காட்டூர் பகுதியில் எளிமையாக இனிதே நடைபெற்றது சோசலிசத்தை மம்தா பானர்ஜி கரம்பிடித்த நிகழ்வு.

கம்யூனிசம் ,லெனினிசம், மார்க்சிசம், சோசலிசம்..

பாரம்பரிய பொதுவுடமை தத்துவத்தை ஏற்றுக் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவரும் சிபிஎம் சேலம் மாவட்ட செயலாளருமான மோகன், இயக்க செயல்பாடுகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் தமது மகன்களுக்கு கம்யூனிசம் ,லெனினிசம், மார்க்சிசம், சோசலிசம் என்று மிகவும் வித்தியாசமாக கொள்கை ரீதியான பெயர்களை சூட்டி உள்ளார்.

பெரியார் சாட்சியாய் அந்தமான் காதலியை கரம்பிடித்த கோவை இளைஞர்

மோகனின் உறவினர் குடும்பத்தில் பிறந்தவர் மம்தா பானர்ஜி. மம்தா பேனர்ஜி, சோசலிசம் என்றாலே அரசியலில் முரண்பட்ட கொள்கை என்பது அனைவருக்கும் நினைவிற்கு வரும். மாறாக முறைப்பெண் மம்தா பானர்ஜியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் சோஷலிசம் இன்று கரம் பிடித்துள்ளார்.

திருமண அழைப்பிதழ்

பெயரில் முரண்.. இல்லற வாழ்வில் நல்லறம்..

"மம்தா பானர்ஜி என்ற பெயர் சிறுவயதில் எனக்கு நெருடலாக இருந்தது. தற்போது பெருமையாக இருக்கிறது. தோழிகள் பேனர் என்று கிண்டல் செய்வார்கள். ஆனால் இப்போது சந்தோஷமாக இருக்கிறது" மணமகள் மம்தா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

வாடிவாசல் முன்பு திருமணம் செய்துகொள்ள காதல் ஜோடி மனு

அரசியலில் முரண்பட்ட கொள்கை கொண்ட பெயர்கள் என்றாலும் இல்லற வாழ்வில் ஓர் எடுத்துக்காட்டாய் திகழ்வோம் என்று கூறுகிறார் சோசலிசம். இவர்களின் திருமணத்திற்கு, உறவினர்கள் மட்டுமல்லாது அனைத்துக் கட்சியினரும் நேரடியாக வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

புதிய அடையாளம்

இந்த திருமணம் குறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, "இவர்களின் பெயர் மட்டுமல்ல கியூபா, வியட்நாம் என்று இடதுசாரி இயக்கங்கள் புரட்சியை ஏற்படுத்திய நாடுகளின் பெயர்கள் இங்கே பல குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.

மணமகன் சோசலிசம் - மணமகள் மம்தா பானர்ஜி

இதுபோன்ற சித்தாந்த ரீதியான புரட்சி நடைபெற்ற நாடுகளில் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுவது என்பது ஒரு புதிய அடையாளம் . இதன் மூலம் மார்க்சியம் மட்டுமே வெல்லும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க; 'அண்ணாந்து பார்க்க வைத்த கல்யாணம்' - விமானத்திற்குள் டும்.. டும்.. சத்தம்

ABOUT THE AUTHOR

...view details