தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு - Male elephant dies after getting caught in electric field

சேலம் மாவட்டத்தில் விவசாயி அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

h
h

By

Published : Jul 24, 2022, 7:38 PM IST

Updated : Jul 25, 2022, 10:46 AM IST

சேலம்:மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியில் ஆலமரத்துபட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டியுள்ளது.

இந்நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி புஷ்பநாதன் தனது விவசாய நிலத்தில் வன விலங்குகள் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுக்க விவசாய நிலத்தைச் சுற்றி கம்பி கட்டி அதில் சட்ட விரோதமாக மின் இணைப்பு அமைத்திருந்தாக கூறப்படுகிறது.

நேற்று இரவு சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வடபருகூர் வனப்பகுதியில் இருந்து வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, தோட்டத்தில் இருந்த மின்சார கம்பியை மிதித்ததில் உயிரிழந்தது.

இது தொடர்பாக தகவலறிந்த மேட்டூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்ட விரோதமாக விவசாய நிலத்தில் மின்சார வேலி அமைத்த புஷ்பநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் யானையை அடக்கம் செய்யும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வெறி நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த விவசாயி பலி

Last Updated : Jul 25, 2022, 10:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details