தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகள்! - கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

AIADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

AIADMK
மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 7:21 PM IST

சேலம்: சேலம் மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், அமமுகவைச் சேர்ந்த மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் இ.மகேந்திரன் தலைமையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சி மூலம் அமமுக மாவட்ட அவைத்தலைவர் குரு.பாலமுருகன், சித்துபட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இபிவி ஜெயராமன், உசிலம்பட்டி நகரச் செயலாளர் பி.குணசேகர பாண்டியன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணை சேர்மனுமான மலேசியா ஆர். பாண்டியன், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் சி.நரசிங்க பெருமாள், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ஆர்.விருமப்பராஜன் ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.

மேலும், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எம்.அஜிம் பாஷா, உசிலம்பட்டி நகர் மன்ற உறுப்பினர் வி.பிரகதீஸ்வரன், நகர அம்மா பேரவை தொழிற்சங்க இணை செயலாளர் எஸ்.பால்பாண்டி ஆகியோர் அமமுகவிலிருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது புதியதாக கழகத்தில் இணைந்த நிர்வாகிகளுக்குப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க:பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்..!

ABOUT THE AUTHOR

...view details