தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடும் பேருந்தில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! - சேலம் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

lovers-suicide-attempt-in-salem
lovers-suicide-attempt-in-salem

By

Published : Dec 22, 2021, 1:34 PM IST

சேலம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தனது உறவுக்கார பெண்ணை காதலித்துவந்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்று பின்னர் அங்கிருந்து வேலை தேடிக்கொண்டு பெங்களூருவுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு அரசுப் பேருந்தில் வந்துள்ளனர். அப்போது இருவரும் பேருந்திலேயே மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதைப் பார்த்த சகப் பயணிகள் அதிர்ச்சியடைந்து உடனே இருவரையும் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்த நிலையில் லோகேஸ்வரி வீட்டில் அதிகளவில் தொந்தரவு கொடுத்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தற்போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காதலர்களின் பெற்றோருக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருப்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: காதலியைப் பிரிய நேரிட்டதால் இளைஞர் எடுத்த விபரீத முயற்சி

ABOUT THE AUTHOR

...view details