தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலியை கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணை மணந்த இளைஞன்! - சேலம்

சேலம்: காதலித்து கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணை மணந்த இளைஞன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன் மீது புகார்

By

Published : Apr 29, 2019, 2:08 PM IST

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசி. இவரின் உறவினர் மகன் கார்த்திக். கடந்த மூன்று வருடமாக இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இருவரும் நெருங்கிப் பழகியதால் இளவரசி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனையறிந்த இளவரசியின் பெற்றோர், திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து புகாரை விசாரித்த திருச்செங்கோடு காவல் துறையினர், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இளவரசிக்கும் கார்த்திக்கிற்கும் காவல் நிலையத்திலேயே திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்து நான்கு நாட்களிலேயே வேலை தேடுவதாக இளவரசியிடம் கூறிச்சென்ற கார்த்திக் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை.

இந்நிலையில் இளவரசிக்கு அவரது கணவர் கார்த்திக் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த இளவரசி மற்றும் அவரது பெற்றோர் இது குறித்து கொளத்தூர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் இளவரசி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்து தனது கணவரை மீட்டுத் தரும்படியும் புகார் அளித்தார்.

இளம் பெண் ஒருவர் தன் கணவனை மீட்டுத் தருமாறு புகார் அளித்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details