தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதி: பாதுகாப்பு வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா! - திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு வேண்டி தர்ணா

சேலம்: மேட்டூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட காதல் தம்பதி
தர்ணாவில் ஈடுபட்ட காதல் தம்பதி

By

Published : Feb 3, 2020, 5:18 PM IST

சேலம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இதயஅரசு (23). இவர் கல்லூரியில் படித்த போது அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த யாஷ்வினி என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

வெல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரது வீட்டிலும் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 13ஆம் தேதி , அம்மாப்பேட்டை பலபட்டரை மாரியம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதயஅரசின் பெற்றோர், உறவினர்கள், வேறு சாதிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இருவரையும் பிரிக்கத் திட்டம் தீட்டியுள்ளனர்.

இதனால், தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கூறி, காதல் தம்பதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இளம் தம்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை அளித்ததின் பேரில், இருவரும் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட காதல் தம்பதி

இது குறித்து இளம் தம்பதியினர் கூறும்போது, 'பெற்றோர், உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் உங்களை பிரிக்காமல் விடமாட்டோம்' என மிரட்டி வருவதாகவும் கூறினர்.

மேலும், தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் இளம் தம்பதியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்துகொண்ட மகள் மீது ஆசிட் வீச்சு; கர்ப்பிணி என்றும் பாராத கொடூரத் தந்தை

ABOUT THE AUTHOR

...view details