தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோர் எதிர்ப்பை மீறி பெரியார் சிலை முன் காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்! - Suyamariyathai Marriage

காதல் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பை மீறி, வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி பெரியார் சிலை முன் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட நிலையில், குடும்பத்தினரின் அச்சுறுத்தல் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

திருமணம்
திருமணம்

By

Published : Jan 2, 2023, 5:27 PM IST

Updated : Jan 2, 2023, 5:45 PM IST

பெற்றோர் எதிர்ப்பை மீறி பெரியார் சிலை முன் காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்!

சேலம்:பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் குமார்(23). மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த கவுசல்யா(20) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பாவை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தபோது, நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மலர்ந்தது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதனால் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி வசந்த குமாரை திருமணம் செய்து கொள்ள கவுசல்யா முடிவு செய்துள்ளார்.
வீட்டிலிருந்து கவுசல்யா வெளியேறிய நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை முன் வசந்த குமார் கவுசல்யாவுடன் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டார். காதல் ஜோடி இருவரும் ஒருவருக்கொருவர் மலர் மாலையை மாற்றிக்கொண்டு வாழ்க்கை ஒப்பந்தத்திற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பெண் வீட்டாரால் அச்சுறுத்தல் இருப்பதாக கருதி காதல் ஜோடி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். காதல் தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:Supreme Court: பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Last Updated : Jan 2, 2023, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details