கொலை மிரட்டல் விடுக்கும் உறவினர்கள்: ஆட்சியரிடம் மனு அளித்த காதல் ஜோடி - காதல் திருமணம்
சேலம்: கொலை மிரட்டல் விடுக்கும் உறவினர்களிடமிருந்து காப்பாற்றக் கோரி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
![கொலை மிரட்டல் விடுக்கும் உறவினர்கள்: ஆட்சியரிடம் மனு அளித்த காதல் ஜோடி மனு அளிக்க வந்த காதல் ஜோடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:26:37:1601718997-tn-slm-01-love-married-couple-petition-vis-pic-script-7204525-03102020143439-0310f-1601715879-194.jpg)
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி(21). பட்டதாரியான இவர் சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்தி(22) என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, பெற்றோர் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரும் தங்களது வீட்டைவிட்டு வெளியேறி, சேலம் அம்மாப்பேட்டை பெருமாள் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த இவர்களது பெற்றோர், இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுக்கும் உறவினர்களிடம் இருந்து தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்த்தி தனது கணவருடன் வந்து மனு அளித்தார்.