தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாட்டரி சீட்டு விற்பனை அமோகம்: தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை - லாட்டரி சீட்டு விற்பனை

சேலம்: மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால், அதனை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Salem

By

Published : Oct 15, 2019, 6:53 PM IST

சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொளத்தூர், தண்டா, கோவிந்தப்பாடி, தங்கமாபுரி பட்டணம், குள்ளமுடையானூர், கருமலைக்கூடல், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே லாட்டரி சீட்டு விற்பனை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தாலும் கேரளா, சிக்கிம், மேகாலயா, பூட்டான் உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கிவரும் லாட்டரி சீட்டு நிறுவனங்களிலிருந்து ஏஜென்ட்கள் மூலம் இங்கு விற்பனையாகிவருகிறது.

இதனால் அப்பகுதியில் தினக்கூலி செய்து வாழ்க்கை நடத்திவரும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு லாட்டரி விற்பனையை தடை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆன்லைன் லாட்டரி குலுக்கல்: 14பேரை கைது செய்த தனிப்படையினர்

ABOUT THE AUTHOR

...view details