தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாட்டரி சீட்டு தற்கொலை எதிரொலி: சேலத்தில் லாட்டரி விற்ற கும்பல் கைது! - 3rd Number Lottery Sale

விழுப்புரம் சம்பவம் எதிரொலியாக சேலத்தில் லாட்டரி விற்பனையை தடுக்க காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

lottery
lottery

By

Published : Dec 13, 2019, 8:27 PM IST

லாட்டரி சீட்டுகளை நம்பி வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த தம்பதி மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு அவர்களும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சேலத்தில் லாட்டரி விற்பனையைத் தடுக்க மாநகர காவல் துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சோளம்பள்ளம் பகுதியில் 3ஆம் நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்திரா, அவரது மகன் பாரதி, மருமகள் பிரியா, சந்திராவின் தங்கை சங்கீதா ஆகியோரை சூரமங்கலம் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

இதையும் படிங்க: லாட்டரியால் சீரழிந்த குடும்பம் - 5 பேர் தற்கொலை..

கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வீட்டிலேயே லாட்டரியை ஒரு பேப்பரில் எழுதி கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதேபோன்று சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி வியாபாரம் கொடிகட்டி பறக்கும் நிலையில், அதனை முற்றிலுமாக தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: லாட்டரி சீட்டு தற்கொலை;குற்றவாளிகள் தப்பிக்க முடியாது - அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details