ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து யுகாந்தர், ஸ்ரீனு ஆகிய இருவரும் 20 மாடுகளை ஏற்றிக்கொண்டு மினிலாரியில் கேரளாவிற்குச் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் தருமபுரியை அடுத்துள்ள ஜோடுகுளி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து இன்னோவா கார் ஒன்று வந்துள்ளது.
அந்தக் காரில் வந்த இருவர் மினிலாரியை வழிமறித்து, அதிலிருந்த ஓட்டுநர்களை அடித்துக் காரில் ஏற்றியுள்ளனர். பின்பு காரில் வந்த நபர்களில் ஒருவர் மினிலாரியை ஓட்டி வந்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கவனித்த பூ லோடு ஏற்றி வந்த டெம்போ ஓட்டுநர், கடத்தப்பட்ட லாரியை ஆர்.சி.செட்டிபட்டி அருகே வழிமறித்து நிறுத்தினார். பின்னர் அவர் கடத்தல்காரர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
லாரியோடு சேர்த்து ஓட்டுநர்களையும் கடத்திய கும்பல் தகராறு நடந்ததைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததும், கடத்தல்காரர்கள் காரிலிருந்த இரண்டு லாரி ஓட்டுநர்களையும் இறக்கிவிட்டு காரில் தப்பிக்க முயற்சித்தனர். அப்போது அவர்கள் இருவரையும் பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் லாரி கடத்தல்காரர்கள் ஓமலூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
காவல் துறையினரின் விசாரணையில், அவர்கள் இருவரில் ஒருவர் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த சபான்(37) என்பதும், மற்றொருவர் கேரள மாநிலம் போர்ட் கொச்சியைச் சேர்ந்த சிப்பு (29) என்பதும் தெரியவந்தது.
இதையும் படிக்கலாமே: திருட்டு பயிற்சிப் பட்டறை நடத்திய திருடன்... வலைவீசி பிடித்த காவல் துறை!