தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லோக் அதாலத் மூலம்11 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு! - லோக் அதாலத் மூலம் 11 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

சேலம்: அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று கூடிய தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 11 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Lok Adalat settles over 11 thousand cases in Salem
in salem lok adalat 11 thousand cases completed

By

Published : Dec 14, 2019, 5:07 PM IST

நாடு முழுவதும் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமையில் கூடியது.

அதில் பேசிய அவர், மக்கள் நீதிமன்றங்கள் மூலம் அளிக்கப்படும் தீர்ப்புகளை மேல்முறையீடு செய்ய முடியாது. மக்கள் நிரந்தர தீர்வுகளைக் காண முன்வர வேண்டும். இதன் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க வாய்ப்புள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய மக்கள் நீதிமன்றங்களின் மூலம் உடனடியாக தீர்வு கிடைக்கும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

சேலத்தில் 11 ஆயிரம் வழக்ககுகள் முடித்துவைப்பு

பின்னர், சாலை விபத்தில் படுகாயம் அடைந்த சேலம் சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணின் வழக்கு விசாரிக்கப்பட்டு நிவாரணத் தொகையாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான ஆவணம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க:நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம்: நீதிபதி ரத்த தானம்

ABOUT THE AUTHOR

...view details