சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமையில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள், ஏழ்மை ஒழிப்பிற்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி சக்திவேல் கலந்துகொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்.
அப்போது, அறநெறிகளின் அடிப்படையில் பின்பற்றப்படும் உரிமைகள் காலம்தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கங்களுக்கும், உரிமைகளுக்கும் சட்டப் பின்னணி கிடையாது. இவை சட்டத்தால் காக்கப்படுபவை அல்ல. குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை அனைத்து சமுதாயமும் ஏற்றுக் கொள்கிறது.