சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நீர் ஆதாரம் காத்தல், மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய நீர் ஆதாரங்கள் ஏரிகளை புதுப்பித்தல், நீர் நிலை மேம்பாடு, பயன்பாடு ஆழ்துளை கிணறு மீள்நிரப்புதல், தீவிர மரம் வளர்ப்பு ஆகியவற்றின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் ஏரி சீரமைப்பு... - Water Management
சேலம்: பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரியின் புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் சதீஷ் தொடங்கிவைத்தார்.
ஏரி சீரமைப்பு
இந்நிலையில், பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள 20. 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட வருவாய்த் துறைக்கு சொந்தமான போடிநாயக்கன்பட்டி ஏரியின் கரைகளை பலப்படுத்தல், கரையோர பகுதிகளில் உள்ள முட்புதர்கள், ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகள் இன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், பேரிடர் சங்க நிர்வாகிகள், தன்னார்வ அமைப்புகள், சுகாதார அலுவலர் எஸ்.மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.