சேலம் மாவட்டம் எருமாப்பாளையம் பகுதியில் 9.5 ஏக்கர் நிலப்பரப்பில் குருவிப்பனை ஏரி அமைந்துள்ளது. ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு, தொழிற்சாலை பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியில் கலப்பதால் ஏரி முழுவதும் மாசடைந்து காட்சியளிக்கிறது.
விசாரணை

இந்நிலையில் இன்று (ஜூன் 11) ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்தத் தகவலின்பேரில் விரைந்து வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், காவல் துறை உதவியுடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, 'ஏரியில் மீன்கள் இறந்து மிதப்பதற்கு ரசாயன கழிவுகள் கலந்தது காரணமா?’ என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள்
தனியார் நூற்பாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் தான் மீன் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மீண்டும் இதுபோல் நடக்காதிருக்க மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.