தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ அவரது உதவியாளர் கைது

சேலம்: லஞ்சம் வங்கியதாக பெண் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

File pic

By

Published : Jun 1, 2019, 1:02 PM IST

சேலம் மாவட்டம் நாகியம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. விவசாயியான இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காலி நிலத்தை தனி பட்டாவாக மாற்றித் தரக்கோரி நாகியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிருந்தாவிடம் விண்ணப்பித்தார். அப்போது பிருந்தா அதற்கு பத்தாயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டார். முன்பணமாக மூன்றாயிரம் ரூபாயை தரவேண்டும் என்றார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் செய்தார். இதனையடுத்து இன்று காலை ராஜாவிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர்.

இதனையடுத்து இன்று (ஜூன் 1) காலை ராஜாவிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்து அனுப்பினர். ராஜா அப்பணத்தை பெற்றுக்கொண்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பிருந்தாவிடம் கொடுத்தார்

அப்போது பிருந்தா லஞ்ச பணத்தை தன்னிடம் தரவேண்டாம். கிராம உதவியாளர் பழனிச்சாமியிடம் தருமாறு தெரிவித்தார். பிறகு லஞ்சப்பணத்தை ராஜா பழனிச்சாமியிடம் கொடுக்கும் போது பழனிசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் பிருந்தாவையும் கைது செய்தனர்.

மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து லஞ்சப்பணமான ரூபாய் 1400ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான இருவரையும் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிருந்தாவை சேலம் பெண்கள் சிறையிலும், பழனிசாமியை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details