சேலம் மாநகரம் எருமாபாளையம் ஊராட்சிப் பகுதியில் குருவி பனை ஏரி உள்ளது. இது சுமார் எட்டு ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழை பெய்தால் மட்டுமே, இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பும்.
இதற்குக் காரணம் ஏரிக்கு வரும் கால்வாய், வாய்க்கால் வழிகளை நெடுஞ்சாலை அமைக்கும்போது மூடியது. ஏரியைச் சுற்றிலும் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் உள்ளன.
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் குருவி பனை ஏரி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக குருவி பனை ஏரி நிரம்பியது. அப்போதெல்லாம் ஏரியை பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்திவந்தனர்.
தற்போது ஏரியில் தனியார் நூற்பாலையிலிருந்து கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் ஏரியின் நீரைப் பயன்படுத்துவது இல்லை.
ஏரி தூர்வாரப்படாததால் கனமழை பெய்தும் ஏரியில் மழைநீர் நிரம்பவில்லை. எனவே ஏரியின் நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றது. இதன் காரணமாக எருமாபாளையம், கிச்சிபாளையம், களரம்பட்டி ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் நிரம்பாமல் உள்ளது. ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் கூட தண்ணீர் வரவில்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் குருவி பனை ஏரி குருவி பனை ஏரியை தூர்வார பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவைத்தனர். ஆனால் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை.
இது குறித்து விவசாயி ஒருவர், "குருவி பனை ஏரியில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றதாக கணக்கு மட்டுமே அலுவலர்களால் காட்டப்பட்டுள்ளது. குருவி பனை ஏரியை நம்பிதான் எருமாபாளையம், கிச்சிபாளையம், களரம்பட்டி ஆகிய பகுதி மக்கள் உள்ளனர். ஆகவே உடனடியாக ஏரியை தூர்வார வேண்டும். அதேபோல் தனியார் நிறுவனத்தின் கழிவுநீர் ஏரியில் கலக்காதபடி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
குருவி பனை ஏரியை மீட்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துவரும் சமூக ஆர்வலர் சிவராமன், "சுமார் 8 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்திருந்த குருவி பனை ஏரி, தற்போது மூன்று ஏக்கருக்குச் சுருங்கிவிட்டது. இதற்குக் காரணம் ஆக்கிரமிப்புதான்.
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் குருவி பனை ஏரி ஒரு காலத்தில் விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் ஆண்டு முழுவதும் பயன்பட்டுவந்த, இந்த ஏரி தற்போது குட்டையாக மாறியுள்ளது. ஏரியின் நாலாபுறமும் வளர்ச்சி என்ற பெயரில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஏஎல்சி என்ற தனியார் நிறுவனம் ஏரியின் பெரும் பகுதியை அபகரித்துக்கொண்டது.
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் குருவி பனை ஏரி இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம் கேட்டேன். சேலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் அளித்தேன். ஆனால் ஏரியை மீட்கும் நடவடிக்கைகளை அலுவலர்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை" என்றார்.
குருவி பனை ஏரியின் ஆக்கிரமிப்பு குறித்து சேலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொலைபேசி மூலம் தொடர்பகொண்டு கேள்வி கேட்டோம். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வி பேசுகையில், "குருவி பனை ஏரி ஆக்கிரமிப்பு குறித்து ஏற்கனவே புகார் வந்தது. அதன்படி ஏரியின் பரப்பளவை அளந்து வரைபடம் தயார் செய்து வைத்திருக்கிறோம்.
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் குருவி பனை ஏரி ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. ஏஎல்சி நிறுவனத்திற்கு ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் ஏரியை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை!